சென்னை: தமிழ்நாடு அரசு, 2023-24 நிதியாண்டில், வாகனப் பதிவு மற்றும் புதுப்பித்தல் மூலம் தமிழ்நாடு ரூ. 10,076.64 கோடி வருவாய் ஈட்டி உள்ளது. இது கடந்த ஆண்டை விட , 33.29% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் 1,373 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. இதன்மூலம் கடந்த ஆண்டு (2024) மட்டும் நாடு முழுவதும் 2 கோடியே 61 லட்சத்து 83 ஆயிரத்து 620 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் வாகன பதிவு உள்ளிட்ட பரிமாற்றங்கள் மூலம் அரசுக்கு ரூ.98 ஆயிரத்து 494 கோடியே 99 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. இது முந்தைய ஆண்டான 2023-ம் ஆண்டு ரூ.87 ஆயிரத்து 670 கோடி வருமானம் அதிகம் என்பதும் தெரிய வந்துள்ளது.
வாகன பதிவு மற்றும் புதுப்பித்தலில், உத்தரபிரதேசம் மாநிலம் தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் 2வது இடத்திலும், 3வது இடத்தில் தமிழகம் உள்ளது.
அதே வேளையில், வாகனப்பதிவை புதுப்பித்தல் மற்றும் பரிமாற்றங்கள் என்ற அடிப்படையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. தமிழகத்தை பொறுத் தவரை மொத்தம் 148 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. அதில் கடந்தாண்டு (2024) 19 லட்சத்து 53 ஆயிரத்து 513 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது மட்டுமின்றி, 98 லட்சத்து 47 ஆயிரத்து 334 பரிமாற்றங்கள் நடந்துள்ளன. இந்த பட்டியலின்படி, நாட்டிலேயே தென்மாநிலங்களான தமிழகம், கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் முன்னணியில் இருந்து வருகின்றன.
தமிழகத்தில், மாநிலம் முழுவதும் மொத்தம் 148 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. இதன்மூலம் கடந்த 2024ம் ஆண்டு மட்டும், 19 லட்சத்து 53 ஆயிரத்து 513 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2023-24ல் வாகனப் பதிவு மற்றும் புதுப்பித்தல் மூலம் தமிழ்நாடு ₹10,076.64 கோடி வருவாய் ஈட்டியது, 2023ல் ₹7,560 கோடியிலிருந்து 33.29% அதிகரித்துள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு 18.26 லட்சமும், 2022-ம் ஆண்டு 17 லட்சமும், 2021-ம் ஆண்டு 15.15 லட்சம் வாகனங்கள் பதிவாகி உள்ள நிலையில், கடந்த 2024ம் ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவில் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம், ரூ.10 ஆயிரத்து 76 கோடியே 64 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு வாகனப்பதிவுகள் மற்றும் புதுப்பித்தல் மூலம், ரூ.7 ஆயிரத்து 560 கோடியும், 2022-ம் ஆண்டு ரூ.6 ஆயிரத்து 449 கோடியும், 2021-ம் ஆண்டு ரூ.5 ஆயிரத்து 10 கோடியும் வருவாய் இருந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு அதிக அளவில் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதும், இதன் காரணமாக அதிக அளவிலான வருவாயை அரசு ஈட்டியிருப்பதும் தெரிய வந்துள்ளது.
மேலும், வாகனங்கள் பதிவில், தமிழ்நாட்டிலேயே, சென்னை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் முதலிடத்தில் உள்ளது. 2-வது இடத்தில் பூந்தமல்லி, 3-ம் இடத்தில் கோவை வடக்கு, 4-வது இடத்தில் தாம்பரம், 5-வது இடத்தில் கோவை தெற்கு உள்ளது.
ஆனால், அரசு வருவாய் கிடைத்துள்ளதில், சென்னை மேற்கு முதலிடத்திலும், 2-வது இடத்தில் சென்னை தெற்கு, 3-வது இடத்தில் சென்னை மத்தியம், 4-வது இடத்தில் தாம்பரம், 5-வது இடத்தில் பூந்தமல்லி ஆகிவையும் இருக்கின்றன.
தமிழ்நாடு ஆர்டிஓக்கள் 98.4 லட்சம் பரிவர்த்தனைகளைச் செய்து, பரிவர்த்தனை அளவில் நாடு முழுவதும் முதல் இடத்தைப் பிடித்துள்ளனர். தேசிய அளவில், வாகனப் பதிவு மற்றும் வருவாயில், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவை அடுத்து தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது.