சென்னை:
நேஷனல் ஹெரால்ட் வழக்கில், சோனியா இன்று ஆஜராக உள்ள நிலையில், தமிழக காங்கிரஸ் நாளை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேஷனல் ஹெரால்ட்’ வழக்கில், எந்த பணப் பரிமாற்றமும் நடைபெறாத நிலையில், பண மோசடி வழக்கு என்பது, பா.ஜ.,வின் பழிவாங்கும் நடவடிக்கை என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியாவை, இன்று ஆஜராகுமாறு, அமலாக்கத் துறை ‘சம்மன்’ அனுப்பி, காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை முடக்கி விடலாம் என, மத்திய அரசு கருது கிறது.

மத்திய அரசின் அமலாக்கத் துறை வாயிலாக, பா.ஜ.,வின் பழிவாங்கும்போக்கை கண்டித்து, நாளை, அனைத்து மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.

சென்னையில் உள்ள ஒன்பது மாவட்ட காங்கிரஸ் சார்பில், எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தின் அருகில், என் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.