சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து, கொரோனா கட்டுப்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழக டிஜிபி உள்பட 4 உயர்அதிகாரிகள் இன்று காலை திடீரெ டெல்லி புறப்பட்டு சென்றனர். இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அரசு உயா்அதிகாரிகள் 4 போ் இன்று காலை விமானங்களில் திடீா் டில்லி பயணம் மேற்கொண்டுள்ளனர். மத்தியஅரசின் அவசர அழைப்பின் பேரில் அவர்கள் டெல்லி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, தமிழக அரசு தலைமை செயலாளா் ராஜுவ் ரஞ்சன், தமிழக அரசு உள்துறை செயலாளா் பிரபாகா், தமிழக போலீஸ் டிஜிபி திரிபாதி, தமிழக அரசு உள்துறை இணை செயலாளா் முருகன் ஆகிய 2 போ் இன்று காலை 6.30 மணிக்கு ஏா்இந்தியா விமானம் மற்றும் விஸ்தாரா ஏா்லைன்ஸ் விமானத்தில் சென்னையிலிருந்து டில்லி புறப்பட்டு சென்றனா்.
தமிழக அரசு உயா்அதிகாரிகள் 4 போ் திடீரென டில்லி புறப்பட்டு சென்றுள்ளது கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
[youtube-feed feed=1]