சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூன் 27 ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில், திமுக அரசு பதவி ஏற்ற கடந்த ஓராண்டு காலத்தில், 5க்கும் மேற்பட்ட அமைச்சரவை கூட்டங்கள் நடத்தப்பட்டு பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அடுத்த கேபினட் கூட்டம் வரும் 27ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போது மேகதாது பிரச்சனை, ஆன்லைன் ரம்மி, புதிய கல்விக்கொள்கை உள்பட பல்வேறு விவகாரங்கள் எழுந்துள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் வருகின்ற ஜூன் 27 ஆம் தேதி தலைமைச்செயலகத்தில் நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், சில கொள்கை முடிவுகளும் எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.