சென்னை:
விமானப் பயணிகள், விமான நிலையத்தில் உள்ள பாதுகாவலர்களிடம் இந்த 5 அடையாள அட்டைகளில் 1ஐக் காட்ட வேண்டும் என்று மத்திய சிவில் போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் கூறி உள்ளனர்.
சமீப காலமாக பயங்கரவாதிகளின் மிரட்டல்களைத் தொடர்ந்து நாடு முழுவதும் விமான நிலையங்களில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பாதுகாப்பு காரணமாக விமானப் பயணிகளின் அடையாள அட்டை மற்றும் உடமைகளை சோதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், விமான நிலையத்திற்குள் நுழைவதற்கு விமானம் பயணிகள் இப்போது அரசு வழங்கிய ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை அல்லது முகவரி ஆதார ஆவணத்துடன் கூடிய பான் கார்டு இவற்றில் ஏதாவது ஒன்றை காட்ட வேண்டும் என்று விமானத்துறை உத்தரவிட்டு உள்ளது.
இதுகுறித்து கூறிய இந்திய விமான நிலைய ஆணையத்தின் (ஏஏஐ) அதிகாரி, சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி (பிசிஏஎஸ்), பாதுகாப்பை கடுமையாக்கும் முயற்சியில், கடந்த 2017 ம் ஆண்டு வெளியிடப்பட்ட “புறப்படும் பயணிகளின் பாதுகாப்புக் கட்டுப்பாட்டுக்கான புகைப்பட அடையாள ஆதாரங்களின் பட்டியலை” திருத்தி விமான நிலையங்களுக்கு ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது. அதில், மாணவர்களுக்கான கல்வி நிறுவனங்கள் வழங்கிய அட்டைகள், மாநில மற்றும் மத்திய அரசுகள் வழங்கிய சேவை அடையாள அட்டைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பிறவற்றில் 10 புகைப்பட அடையாள ஆவணங்கள் இருந்தன. அங்கீகரிக்கப்பட்ட அட்டைகளின் புதிய பட்டியல் டிக்கெட்டில் சேர்க்கப்படும் என்று இருந்தது.
ஆனால், தற்போது அது மாற்றப்பட்டு உள்ளது. புதிய சுற்றறிக்கைப்படி, மேலே கூறப்பட்டுள்ள 5 அடையாள அட்டைகளில் ஒன்று கண்டிப்பாக இருக்க வேண்டும் என்றும், இது டிஜியாத்ரா திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாகும், இதன் கீழ் பயணிகள் காகிதமில்லாமல் பயணிக்க முடியும், என்றார். “பயணிகள் தங்களை இணையதளத்தில் பதிவுசெய்து, அவர்களின் ஆதாரை இணைத்தவுடன், அவர்கள் தங்கள் போர்டிங் பாஸைக் காட்டி உள்ளே செல்ல முடியும்,” என்று அவர் கூறினார்.
சமீபத்தில் மூத்த வழக்கறிஞரும், பார் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் இணைத் தலைவருமான எஸ்.பிரபாகரன் பார் கவுன்சில் அடையாள அட்டையை காட்டிய நிலையில், அவரை மதுரை விமான நிலையத்திற்குள் அனுமதிக்க சி.ஐ.எஸ்.எஃப் வீரமர்கள் மறுத்துவிட்டனர்.
இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து கூறிய விமான நிலைய இயக்குனர் மதுரை, வி.ராவ், திருத்திய பி.சி.ஏ.எஸ் விதிகள் படி, 5 அடையாள அட்டைகள் மட்டுமே அனுமதிக்கப்படும், அதில், பார் கவுன்சில் அடையாள அட்டை அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களின் பட்டியலில் இல்லை என்று கூறினார்.
இதுகுறித்து தகவல்கள் கிடைத்ததும், அவரை விமானத்தின் விமானம் செய்ய பயணித்ததாகவும், ஏற்கனவே வெளியிடப்பட்ட 10 ஆவணங்கள், தற்போது 5ஆக குறைத்து கடந்த 20ந்தேதி புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.