சென்னை: தனிநபர் வருமானத்தில் தமிழ்நாடு இந்திய அளவில் 2-ஆம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளதை முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்து உள்ளார். மேலும்,  “அதிமுக ஆட்சியின் வளர்ச்சியைக் காட்டிலும் இருமடங்கு மிஞ்சினோம்” என சுட்டிக்காட்டி உள்ளார்.

தனிநபர் வருமான குறியீடு பட்டியலில் இந்திய அளவில் தமிழ்நாடு இரண்டாம் இடம் பிடித்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார். இதற்கு, “கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் வளர்ச்சியைக் காட்டிலும் இருமடங்கு மிஞ்சினோம்” என முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், திராவிட மாடல் 2.0-வில், முதல் மாநிலமாக உயருவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

தேசிய சராசரியை விஞ்சினோம்!

கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் வளர்ச்சியைக் காட்டிலும் இருமடங்கு மிஞ்சினோம்!

அடுத்து வரவுள்ள #DravidianModel 2.0-இல் முதல் மாநிலமாக உயருவோம்

— M.K.Stalin (@mkstalin) July 23, 2025  இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அமைச்சர் தங்கம் தென்னரசு பதிவையும் இணைத்துள்ளார்.