டில்லி,
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்தனர் அதிமுக மற்றும் தமிழக எம்.பி.க்கள்.
மத்தியஅரசு கொண்டு வந்துள்ள அகில இந்திய மருத்துவ நுழைவு தேர்வுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி தமிழக சட்டசபையில் சட்ட மசோதா நிறை வேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசின் மசோதாவை கிடப்பில் போட்டுள்ளது மத்திய அரசு.
இதன் காரணமாக தமிழகத்தில் அரசியல் கட்சியினர் மட்டுமின்றி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்நிலையில் நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு, நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தினர். மாநிலங்களவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கங்களையும் எழுப்பினர்.
இதன் காரணமாக பாராளுமன்றம் அமளிதுமளி பட்டது.
இதற்கிடையில் டில்லி சென்றுள்ள தமிழக அமைச்சர்கள் மத்திய அமைச்சர்களை சந்தித்து, நீட் தேர்வு விலக்கு கோரி வலியுறுத்தி வருகின்றனர்.