சென்னை: சென்னையில் தமிழ் வழியில் மருத்துவக்கல்லூரி துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவரதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

சென்னையில் தமிழ் வழியில் மருத்துவக்கல்லூரி துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்தார். 6 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும் எனவும் கூறினார்.