2021 ம் ஆண்டு வெளியான காதம்பரி என்ற தமிழ் படத்தில் நடித்தவர் அகிலா நாராயணன்.

அமெரிக்க வாழ் தமிழ் பெண்ணான அகிலா நாராயணன் அமெரிக்காவில் பட்டப்படிப்பை முடித்து சென்னையில் பாட்டு படித்து வந்த போது மாடலிங் மற்றும் திரைத் துறையில் கால்பதித்தார்.
பின்னர், அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற விரும்பிய அகிலா நாராயணன் பல மாத கடின பயிற்சிக்குப் பின் வெற்றிகரமாக பட்டம் பெற்று அமெரிக்க ராணுவத்தில் வழக்கறிஞராக சேர்ந்திருக்கிறார்.

அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்திருக்கும் முதல் தமிழ் நடிகை என்ற பெருமையை பெற்றுள்ள அகிலா நாராயணன் ராணுவ வீரர்களுக்கான சட்ட ஆலோசனைகளை வழங்க இருக்கிறார்.
Patrikai.com official YouTube Channel