னுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்தவர் அஸ்வின் குமார். இவர் சமீபத்தில் கமல்ஹாசனின் ’அண்ணாத ஆடுறார் ’ பாடலுக்கு டிரெட்மில் மிஷினில் கமல் போலவே நடனம் ஆடி வீடியோ வெளியிட்டார். அதை பார்த்து கமல் பாரட்டினார்.

இதையடுத்து விஜய்யின் ’மாஸ்டர்’ படத்தில் இடம்பெறும் ’வாத்தி கம்மிங்’ பாடலுக்கு விஜய்போசல் டிரெட் மில் மிஷின் மீது நடனம் ஆடினார், தற்போது இந்தி நடிகர் ஹிரித்திக்ரோஷனுக்கு அர்ப்பணிப்ப தாக கூறி ஹிரித்திக் நடித்த ’வார்’ என்ற இந்தி படத்தில் ஆடிய ’ஜெய் ஜெய் சிவ் சங்கர்’ பாடலுக்கு ஹிருத்திக்போலவே நடனம் ஆடி வீடியோ வெளியிட்டிருக் கிறார்.
தொடர்ச்சியாக நடைபயிற்சி செய்யும் நடை மிஷின் மீது நின்று நடனம் ஆடும் அஸ்வினை தற்போது டிரெட்மில் மிஷன் நடன நடிகர் என்று ரசிகர்கள் அவரை செல்லமாக அழைக்கின்றனர்.

[youtube-feed feed=1]