காபூல்:
தாலிபான் தலைவர் ஹைபதுல்லா அகுந்த்சாதா முதன்முறையாகப் பொதுமக்கள் முன்பு தோன்றியுள்ளார்.

தாலிபான் தலைவர் ஹைபதுல்லா அகுந்த்சாதா இறந்துவிட்டதாகத் தகவல் பரவிய நிலையில் முதன்முறையாகத் தனது ஆதரவாளர் முன் அவர் தோன்றி உரையாற்றியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தாருல் உலூம் ஹக்கிமா மதரஸாவில் ராணுவ வீரர்கள் முன்னிலையில் அவர் பேசியுள்ளார். இது தொடர்பாக காணொளியோ, புகைப்படமோ எடுக்கப்படவில்லை. பலத்த பாதுகாப்பும் போடப்பட்டது. அங்கு எடுக்கப்பட்ட 10 நிமிட விடியோ தாலிபான் சமூக வலைத்தள பக்கத்தில் பகிரப்பட்டது. தனது பேச்சின்போது அரசியல் குறித்து எதுவும் பேசாத அவர், முழுக்க முழுக்க மதம் குறித்து மட்டுமே பேசியுள்ளார்.