ஆப்கானிஸ்தானில் தாலிபன் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 60 தேசியப்படை வீரர்கள் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆப்கானிஸ்தானில் மசார் இ ஷெரீப் நகரில், ராணுவ வீரர்கள் வேடத்தில் வந்த தாலிபன் பயங்கர வாதிகள் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 50க்கும் மேற்பட்ட ஆப்கான் தேசியப்படை வீரர்கள் உயிரிழந்தனர்.
ராணுவ முகாமில் ராணுவ சீருடையில் ஊடுருவிய பயங்கரவாதிகள் மெஸ்ஸில் சாப்பிட்டுக்கொண்டிருந்த வீரர்கள் மீது திடீரென தாக்குதல் நடத்தினர்.
இந்த திடீர் தாக்கதலால் நிலைகுலைந்த ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளின் குண்டுக்கு பலியாகினர்.
இதன் காரணமாக அங்கு பெரும் பதற்றம் உருவானது. கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
இதே போல் அருகில் இருந்த மசூதியிலும் நேற்று தொழுகைக்கு திரண்ட மக்கள் மீதும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற இந்த கொடூர தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.