டெல்லி:
180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் டால்கோ ரெயில் விரைவில் ஓடப்போவதாக தெரிகிறது.
ஸ்பெயின் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட டால்கோ அதி விரைவு ரயிலின் சோதனை ஓட்டங்கள் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

டால்கோ ரெயில்
                          டால்கோ ரெயில்

முதல்  சோதனை ஓட்டம் கடந்த மாதம் பரேலி – மொரதாபாத் இடையே நடைபெற்றது.  ரயிலின் வேகம்  80 முதல் 115 கி.மீ வேகத்தில் இயக்கி சோதனை செய்யப்பட்டது. பின்னர் படிப்படியாக சோதனை ஓட்டத்தின் வேகத்தை கூட்டி பல தடவை சோதனை செய்யப்பட்டது. கடைசி கட்ட சோதனையின்போது முழு வேகமான மணிக்கு 180 கி.மீ வேகத்தில்  ரெயில்  இயக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
சோதனையின்போது அப்போது மதுரா-பால்வால் இடையே உள்ள 84 கி.மீ.  தூரத்தை தொலைவை 38 நிமிடங்களில் டால்கோ கடந்து சாதனை படைத்தது. சோதனை ஓட்டத்தின் போது ரெயிலில் மொத்தம் 9 பெட்டிகள்  இருந்தது.
இந்த சோதனை ஓட்டத்தின்போது ஸ்பெயின் நாட்டின் மூத்த அதிகாரிகள், மத்திய ரயில்வே துறை அதிகாரிகளும் ரெயிலில் பயணம் செய்தனர்.
அடுத்த கட்டமாக டால்கோ ரெயிலின் சோதனை டெல்லி – மும்பை இடையிலான  1400 கிமீ தூரத்துக்கு இயக்கப்பட இருப்பதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.