பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் மற்றும் நடிகை டாப்ஸி இருவருக்கும் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும், தயாரிப்பாளர் மது வர்மா மந்தேனா, விகாஸ் பஹ்லுக்கு சொந்தமான இடங்கள், தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான ஃபேண்டம் ஃபிலிம்ஸிலும் இச்சோதனையானது நடைபெற்று வருகிறது.
அனுராக் கஷ்யப், விக்ரமாதித்ய மோத்வானி, மது மான்டெனா, விகாஷ் பெஹல் ஆகியோர் சேர்ந்து மும்பையில் ஃபேன்டம் ஃபிலிம்ஸ் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கினார்கள். 2015ம் ஆண்டு மார்ச் மாதம் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் அந்த நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளை வாங்கியது.
விகாஸ் பெஹல் மீது முன்னாள் ஃபேன்டம் ஊழியை ஒருவர் பாலியல் புகார் தெரிவித்தார். இதையடுத்து கடந்த 2018ம் ஆண்டு அந்த நிறுவனம் மூடப்பட்டது. அந்த நிறுவனம் தயாரித்த மன்மர்சியான் படத்தில் டாப்ஸி நடித்திருந்தார்.
டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் உள்பட பல பிரச்சனைகளுக்கு அனுராக் கஷ்யப்பும், டாப்ஸியும் குரல் கொடுத்து வந்துள்ளனர். விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த டாப்ஸி அரசை விமர்சித்திருந்தார். இந்நிலையில் அவர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடந்திருக்கிறது.
பேந்தம் பிலிம்ஸ் உட்பட 30 இடங்களில் சோதனை நடைபெற்றது. இதில் படத்தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து இயக்குநர், பங்குதாரர்களுக்கு பரிமாற்றப்பட்ட தொகையில் 350 கோடி ரூபாயை கணக்கில் காட்டாமல் மறைத்திருப்பது தெரியவந்துள்ளது.
மேலும், 300 கோடி ரூபாய் முரண்பட்ட தொகை குறித்து படத்தயாரிப்பு நிறுவன ஊழியர்களால் விளக்கமளிக்க முடியவில்லை. அத்துடன், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் உண்மையான தொகையை மறைத்து கணக்கு காட்டியிருப்பதும் தெரியவந்துள்ளது. 5 கோடி ரூபாய் கணக்கில் வராத ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், காஷ்யப், டாப்சிக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் சோதனை தொடர்வதாகவும் வருமானவரித்துறை கூறியுள்ளது.
இந்நிலையில் வருமான வரித்துறை சோதனையில் தனது வீட்டில் இருந்து 5 கோடி ரூபாய்க்கான ஆவணம் கைப்பற்றப்பட்டதாக வெளியான தகவலை நடிகை டாப்சி மறுத்துள்ளார்.
அதில் 3 நாட்களாக நடத்திய சோதனையில் பாரிசில் தனது பெயரில் இல்லாத பங்களாவின் சாவியை வருமான வரித்துறையினர் தேடியதாக கேலியாக குறிப்பிட்டுள்ளார். மேலும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கூற்றுப்படி 2013ம் ஆண்டு தனக்கு சொந்தமான இடங்களில் எந்த வருமான வரிசோதனையும் நடைபெறவில்லை என்றும் டாப்சி கூறியுள்ளார்.