திருவனந்தபுரம்:
கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணாவுக்கும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) தேசியத் தலைவரான முகமது ரியாஸ்-க்கும் இன்று எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. மணமக்கள் இருவருக்கும் இது இரண்டாவது திருமணமாகும்.
கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன். இவர் பெங்களூரில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தின் இயக்குனராக பணிபுரிந்து வருகிறது.. இவருக்கும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தேசியத் தலைவர் பி.ஏ.முகமது ரியாஸுக்கும் இன்று காலை 10:30 மணியளவில் திருவனந்தபுரத்தில் உள்ள கிளிஃப் ஹவுஸில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது. கொரோனா லாக்டவுன் காரணமாக இரு குடும்பத்தை சேர்ந்த முக்கிய உறவினர்கள், நண்பர்கள் உள்பட 50-க்கும் குறைவான நபர்களே திருமணத்தில் கலந்து கொண்டனர்.
பி.ஏ.முகமது ரியாஸ், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி பி.எம். அப்துல் காதர் மற்றும் கே.எம்.அய்ஷாபி ஆகியோரின் மகனாவார்.
திருமண விழாவில் சிபிஎம் மாநில செயலாளர் கோடியேரி பாலகிருஷ்ணன் மற்றும் டிஒய்எஃப்ஐ மாநில செயலாளர் ஏஏ ரஹீம் உட்பட 50 விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
இவர் ஏற்கனவே கடந்த 2009 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் கோழிக்கோடு தொகுதியில் போட்டியிட்டு காங்கிரசின் எம்.கே.ராகவனிடம் 838 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.