சிரியாவில் ஐ எஸ் படைகள் தோற்கடிப்பு : சிரியா ராணுவம் அறிவிப்பு

Must read

டாமஸ்கஸ்

சிரியாவில் ஐ எஸ் படைகள் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது.

சிரியா நாட்டின் அதிபர் ஆசாத்தை எதிர்த்து ஐ எஸ் பயங்கரவாதிகள் உள்நாட்டுப் போர் நிகழ்த்தி வந்தனர். சுமார் 6 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் இந்த உள்நாட்டுப் போரினால் மக்கள் பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.   ஐஎஸ் பயங்கரவாதிகளால் பாதிக்க்கப்பட்ட சிரியா நாட்டு மக்கள் ஏராளமானோர் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக இடம் பெயர்ந்தனர்.

ஐ எஸ் பயங்கரவாதிகள் சிரியா நாட்டின் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.சிரியா நாட்டுக்கு ஆதரவாக அமெரிக்கப் படைகள் களத்தில் இறங்கின. அமெரிக்க படையின் உதவியுடன் அரசு பயங்கர வாதிகளுக்கு எதிராக கூட்டுப்படை அமைத்தது.

இந்த கூட்டுப்படை தொடர்ந்து ஐ எஸ் பயங்கரவாதிகள் வசமிருந்த பகுதிகளை ஒவ்வொன்றாக மீட்டு வந்தது. இந்தப் போரில் ஏராளமானோர் மரணம் அடைந்துள்ளனர். சமீபத்தில் அர்சு கூட்டுப் படையினருக்கும் ஐ எஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையில் கடும் போர் நடந்தது.

இது குறித்தி சிரியா கூட்டுப்படை செய்தி தொடர்பாளர், “ஐ எஸ் பயங்கரவாதிகள் வசமிருந்த இறுதிப் பகுதியும் தற்போது மீட்கப்பட்டு விட்டது. ஐ எஸ் பயங்கர வாதிகள் முழுமையாக தோற்கடிக்கப்பட்டுள்ளனர். ஆயினும் இன்னும் சில தீவிரவாதக் குழுக்கள் உள்ளன. அவர்களை தோற்கடிக்க போர் தொடரும்” என அறிவித்துள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article