சண்டிகர்:
கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் பரவி மக்களை மிரட்டி வந்த பன்றி காய்ச்சல் தற்போது வட மாநிலங்களில் மீண்டும் பரவி வருகிறது.
பஞ்சாபில் பன்றி காய்ச்சல் காரணமாக கடந்த 24 நாளில் 20 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் ஸ்வைன் புளு என்ற பன்றிக் காய்ச்சல் நோய் கடந்த அண்டு பரவியபோது, மத்திய மாநில அரசுகளின் அதிரடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது மீண்டும் வட மாநிலங்களில் பரவி வருகிறது.
இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மால்வா மாவட்டத்தில் மட்டும் இதுவரை 20பேர் உயிரிழந்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் குர்தாஸ்புர், லூதியானா, பாட்டியாலா போன்ற பகுதிகளிலும் காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது.
மேலும், சங்ரூர் பகுதியில் ஒருவரும், மொகாலி, முகட்சர், பர்னாலா, பெரோஷ்புர், பலிக்கா போனற் பகுதிகளிலும் தலா ஒருவர் பன்றி காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து பன்றிக்காய்ச்சல் பரவலாமல் தடுக்க மாநில சுகாதாரத்துறை போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகிறது. மருத்துவமனைகள் மற்றும் காய்ச்சல் பரவி வரும் பகுதிகளில் நோய் தடுப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு மேலும் பரவாமல் தடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது நிலவி வரும் சீதோஷ்ன நிலை காரணமாக காய்ச்சல் பரவி வருவதாகவும், காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றும் “மாநிலம் முழுவதும் மருத்துவமனை களில் சிறப்பு பன்றி காய்ச்சல் வார்டுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன, மாவட்ட சுகாதார அதிகாரிகள் விழிப்புடன் பணியாற்றி வருகிறார்கள் என்றும் மாநில சுகாதார திட்ட அதிகாரி டாக்டர் ககன் சிங் தெரிவித்து உள்ளார்.
“மற்ற மாநிலங்களைவிட மாநிலமானது நோயைக் கையாள்வதில் மிகச் சிறப்பாக செயல்படு கிறது என்றும், மால்வா பகுதியில் அதிக எண்ணிக்கையில் நோயாளிகள் இருப்பதற்கு பின்னால் எந்த காரணமும் இல்லை என்றும் தெளிவு படுத்தி உள்ளார்.
இதுகுறித்து கூறிய மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பிரஹம் மொஹிந்திரா, “H1N1 இன்ஃப்ளூயன்ஸாவின் (நோயை ஏற்படுத்தும் வைரஸ்) கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்ட உள்ளது என்றும், அரசு மருத்துவமனைகளில் தனிமை வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்து உள்ளார்.
மேலும், பன்றி காய்ச்சலின் அறிகுறிகளும், அதனால் ஏற்படக்கூடிய தொற்றுநோய்கள் குறித்தும், காய்ச்சல் ; குளிர்; இருமல்; தொண்டை வலி; ரன்னி அல்லது மூச்சு மூக்கு; தண்ணீர், சிவப்பு கண்கள்; உடல் வலிகள்; தலைவலி; சோர்வு; வயிற்றுப்போக்கு; குமட்டல் மற்றும் வாந்தி யெடுத்தல் போன்ற அறிகுறிகள் இருந்தான் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வந்து பரிசோதனை செய்யும்படியும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றும் கூறினார்.