ஸ்விடன்: பனிக்கட்டிகளால் உருவாக்கப்பட்ட ‘ஐஸ்’ ஹோட்டல்

Must read

 

ஸ்வீடன் நாட்டில் முழுக்க முழுக்க பனிக்கட்டியால் நிர்மானிக்கப்பட்ட ஹோட்டல் ஒன்று பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

”ஐஸ் ஹோட்டல் 365” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஹோட்டல், ஜக்கஸ்ஜார்வி  என்ற பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சுவர்கள், பிரம்மாண்டமான தூண்கள், இருக்கைகள், படுக்கைகள், அம்சமான சுவர்கள் என ஒவ்வொன்றுமே சுற்றுலாப் பயணிகளைக் கவரும்வகையில்  வடிவமைக்கப் பட்டுள்ளன.

இந்த ஐஸ் ஹோட்டலில் 10 லக்சரி சூட் அறைகளும், 12 கலைவடிவங்களான அறைகள், பார் வசதி, பனிக்கட்டிகளான சிற்பங்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.

மேலும், சுற்றுலா பயணிகளின் வசதிக்காக நாய்கள் பூட்டப்பட்ட சறுக்கு வண்டி சவாரியும் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஐஸ் ஹோட்டல் சோலார் பவர் மூலம் இயங்குகிறது.

More articles

Latest article