ஸ்டாக்ஹோம்

கொரோனா ஒழிப்புகளுக்கான சேவையில் ஸ்வீடன் நாட்டு இளவரசி சோஃபியா இறங்கி உள்ளார்.

உலக அளவில் அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஸ்வீடனும் ஒன்றாகும்.  கடந்த 24 மணி நேரத்தில் இங்கு 676 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 13216 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1400 ஐ எட்டி உள்ளது.   இந்த நாட்டில் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நாட்டின் இளவரசி சோஃபியா இன்று முதல் கொரோனா ஒழிப்பு சேவையைத் தொடக்கி உள்ளார்.  இதற்கான 3 நாள் பயிற்சியை இவர் ஆன்லைன் மூலம் முடித்துள்ளார்.   இவர் அந்நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோம் நகரில் உள்ள சோபியாஹெர்மெண்ட் மருத்துவமனையில் சுகாதார உதவியாளராக பணியில் சேர்ந்துள்ளார்.

இவர் நேரடியாக நோயாளிகளைக் கையாள மாட்டார் எனவும் மருத்துவர் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு உதவியாளராக இருப்பர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  சுமார் 35 வயதான சோஃபியா செவிலியர் அணியும் உடைகளை அணிந்து சேவையில் ஈடுபட்டுள்ளார்.