சென்னை:
சென்னையில் நடைபெற்ற பரபரப்பான சுவாதி என்ற பெண் பொறியாளரை கொலை செய்ததாக வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் தற்கொலை செய்துகொண்டார்.
தற்போது புழல் சிறையில் உள்ள மின் கம்பியை பிடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும், அதன் காரணமாக அவர் மரணம் அடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.
பழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமார் மின்கம்பியை கடித்து தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து அவரை ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே உயிரிழந்தார்.
ராயப்பேட்டை மருத்துவமனைக்கு வந்த அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ராம்குமார் இறந்துவிட்டதை உறுதி செய்தனர்.
கடந்த ஜூன் மாதம் 24ம் தேதி, சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சூளைமேட்டை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சுவாதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த பரபரப்பான சம்பவத்தில் சூளைமேடு மேன்சனில் தங்கியிருந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.
பரபரப்பாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது. ராம்குமார் கொலை செய்யவில்லை என்றும், அவர்தான் கொலை செய்தார் என்றும் பரபரப்பாக விவாதங்கள் நடைபெற்று வந்தது.
இந்த வேளையில் ராம்குமார் தற்கொலை முயற்சி – மரணம் செய்தி பொதுமக்களையும், ராம்குமாரின் பெற்றோர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
 
ramkumar