ரவுண்ட்ஸ்பாய்:
தலைப்பை பார்த்ததும் அதிர்ச்சியா இருக்கா? சுவாதி கொலை கேஸ்ல இப்படி ஏகப்பட்ட அதிர்ச்சி இருக்குதே.. என்ன செய்ய?
சுவாதியை படுகொலை செஞ்சது, ராம்குமார் கிடையாது. மணி அப்படிங்கிற இளைஞர்தான் கொலை செய்தாரு. அவரையும் நேத்து கொலை செஞ்சுட்டாங்க. அப்படின்னு பேஸ்புக் தமிழச்சி தன்னோட பக்கத்துல எழுதியிருந்தாரு. ஒரே பரபரப்பூ பூடுச்சு.
ஆனா, அந்த மணி இன்னைக்கு காலையில என்கிட்ட பேசுனாரு.
அதுக்கு முன்னால தமிழச்சியோட பதிவ பார்த்துடுவோம்.
அது இதுதான்:
“சுவாதியை கொன்றவர்களில் ஒருவரான மணி படுகொலை!
———————
சுவாதி படுகொலை வழக்கு விசாரணையில் இருந்த ராம்குமார் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட அன்று சுவாதியை கொன்றவர்களில் ஒருவரான ‘மணி’ என்பவர் குறித்த தகவல்கள் எழுதி இருந்தேன். அவர் கூடிய விரைவில் கொல்லப்படுவார் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.
இத்தகவல் நான் எழுதிய உடன் ஒரு பத்திரிக்கையார் அச்செய்தி உண்மைதானா என்று புலன் விசாரணை செய்து ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். தன் மகனை குறித்து அவதூறு பதிவு போட்டதற்காக தமிழச்சி மீது போலிசில் புகார் அளிக்கப் போகிறேன் என்று பேட்டி கொடுத்திருந்தார்.
ஆனால் இன்று காலை அவர் கொல்லப்பட்டிருக்கிறார். உடல் அடையாளம் தெரியவில்லை என்கிறார்கள். ஆனால் தலை மொட்டையாக இருந்தால் நிச்சயம் மணி தான்.
சுவாதி படுகொலை விவாதங்கள் திசைமாற வேண்டும் என்பதற்காகத்தான் தொடர்ச்சியான படுகொலைகள். இதை செய்வது ஆர்.எஸ்.எஸ் காவிக் கூலிப்படைகள்.
சுவாதியை கொன்றது யார்? ராம்குமாரை கொன்றது யார்? மணியை கொன்றது யார்? இனி யார் யாரை கொல்லப் போகிறார்கள்? இதற்கு அடிப்படியான அரசியல் என்ன? என்ற கேள்வி ஒவ்வொரு மக்களுக்கும் வரவேண்டும்.
சுவாதியை கொன்றவர்களில் ஒருவரான மணி குறித்து பத்திரிகையாளர் எழுதிய பதிவு:
https://patrikai.com/exclusive-swathi-killer-mani-face…/
மணி குறித்து நான் எழுதிய பதிவு:
https://www.facebook.com/1135654236485703/photos/a.1136004999783960.1073741828.1135654236485703/1239995912718201/?type=3&theater”
#தமிழச்சி
22/09/2016”
– இதுதான் தமிழச்சியோட பதிவு.
இந்திய நேரப்படி, 22.09.2016.. வியாழக்கிழமை அதிகாலை 2 மணி சுமாருக்கு இந்த பதிவை எழுதியிருக்காங்க. நான் அதே வியாழக்கிழமை சுமார் ஏழரை மணிக்கு, மணியோட அப்பா இசக்கிக்கு போன்போட்டேன்.
அதான், செத்துட்டதா தமிழச்சி சொல்றாரே.. அந்த மணியோட அப்பா இசக்கிக்குத்தான்.
போன அவருதான் எடுத்தாரு..
“என்ன சார்.. தமிழச்சி மீது கேஸ் கொடுக்கப்போறதா சொன்னீங்களே என்ன ஆச்சு…”
“ஆமாம்.. நெல்லை எஸ்பி கிட்ட புகார் கொடுத்திருக்கோம்…”
“இப்போ உங்க பையன் மணி கொல்லப்பட்டதா தமிழச்சி பேஸ்புக்ல எழுதயிருக்காங்க பேஸ்புக்ல ஒரே பரபரப்பா இருக்கே..”
“ என்னது.. என் மகன் கொல்லப்பட்டானா… கொஞ்சம் இருங்க.. என் மகன் மணியவே பேசச் சொல்றேன்..”
அடுத்து லைனுக்கு மணி வந்தாரு.
“மணி…?”
“சொல்லுங்க.. நான் மணிதான் பேசுறேன்..”
“நீங்க இந்துத்துவ அமைப்புல உறுப்பினரா இருந்திருக்கீங்களா..”
“ரெண்டு மூணு வருசம் முன்னால என் ப்ரண்ட் ஆறுமுகம் பஜ்ரங்தள்னு ஒரு அமைப்புக்கு அழைச்சுட்டு போனானான். அவங்க எனக்கு நெல்லை மாவட்ட இளைஞரணி துணைத்தலைவரோ என்னவோ போஸ்டிங் கொடுத்தாங்க.. அவங்க கூட்டத்துக்கு ரெண்ணு மூணு நாளா போனேன். அதுக்கப்புறம் எங்க அப்பா திட்டுனாங்க.. விட்டுட்டேன். மத்தபடி எனக்கு எந்த அமைப்போடவும் தொடர்பு இல்லை..”
“சரி.. பாஜக பிரமுகர் கருப்பு முருகானந்தத்தோட அடியாள் படையில நீங்க இருக்கிறதா தமிழச்சி எழுதறாரே.. “
“எனக்கு கருப்பு முருகானந்தம் யாருன்னு தெரியாது…”
“சுவாதியை நீங்கதான் கொலை செஞ்சீங்களாமே..”
“அய்யோ… நான் அப்படிப்பட்ட ஆள் இல்லே.. அந்த கொலை சம்பவத்துல என்னை இணைச்சு யாரோ எழுதறாங்கனு தெரிஞ்ச பிறகுதான் சுவாதி கொலை விவகாரம் பத்தி எனக்கு தெரியும். நான் சென்னைக்கே வந்தது இல்லே..”
“சரி.. உங்களை நேத்து காலையில யாரோ கொலை செஞ்சுட்டாங்களாமே..”
“இதுக்கு நான் என்னங்க பதில் சொல்றது…?” – அப்படிங்கிறதோட நிறுத்திக்கிட்டாரு மணி. ஆமா.. கொலை செய்யப்பட்டதா தமிழச்சி சொல்லுற அதே மணி.
ஒருவேளை என்கிட்ட போன்ல போசுனது மணியோட ஆவியா இருக்குமோ? ஏற்கெனவே சுவாதியோட ஆவி, ட்ரெய்ன்ல அலையறதா சில பேரு கிளப்பி விட்டாங்க.
போலீஸ் சொல்ற கதைகள் ஒருபக்கம்னா, எதிர்ப்பக்கம் அவிழ்த்துவிடுற கதைகள் இன்னொரு பக்கம்.
போர்ல முதல்ல கொல்லப்படுறது, “உண்மை”தான் அப்படினு சொல்லுவங்க. பல கொலை வழக்குகளில்லேயும் முதல்ல கொல்லப்படுறது, அதே “உண்மை”தான் போல!