பெங்களூரு,
கன்னட நடிகை ஒருவருடன் பிரபல மடாதிபதியின் மகன் உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளியாகி கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் உள்ள புகழ்பெற்ற மடமான ஹுனாசமரனஹலி சமஸ்தான பீடத்தின் தலைமை மடாதிபதியாக பர்வதராஜ சிவச்சார்யா இருக்கிறார். இந்த மடமானது சுமார் 500 ஆண்டுகள் பழமையானது.
இந்த மடத்தை நிர்வகித்து வரும் சுவாமி பர்வதராஜனின் மகனான தயானந்தா மற்றும் குருநாஞ்சேஸ்வர சிவச்சார்ய சுவாமி. இவர் கன்னட நடிகை ஒருவருடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ ஊடகம் ஒன்றில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மடத்தினுள் உள்ள ஒரு அறையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றதால் இந்த பிரச்சினையை அதிகப்படுத்தி உள்ளது.
ஊடகங்களில் வெளியான இந்த வீடியோவை கண்ட அந்த பகுதி மக்கள் மடத்துக்கு எதிராக திரண்டனர். அங்கு சாமியாரை எதிர்த்து கோஷமிட்டு வருகின்றனர். இதன் காரணமாக அந்த பகுதி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
https://www.youtube.com/watch?v=YZlVbmgRrSg&app=desktop