லக்னோ :
உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் பகுதியில் உள்ள ராமலா காவல்நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர், அலி.
46 வயதான இவர், 25 வருடங்களாக போலீஸ் இலாகாவில் வேலை பார்த்து வந்துள்ளார்..
விதிமுறைகளை மீறி தாடி வளர்த்தாக கூறி அலியை சஸ்பெண்டு செய்து உ.பி.காவல்துறை ஆணையிட்டது.
இரு தினங்களில் தாடியை மழித்து விட்டு, தன் செயலுக்கு அலி வருத்தம் தெரிவித்ததால் அவர் மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
இந்த நிலையில், தாடி வளர்த்ததால் சஸ்பெண்ட் செய்ப்பட்ட அலி, தாடியை எடுத்திருக்க கூடாது என்றும், அதற்கு பதிலாக வேலையில் இருந்தே ராஜினாமா செய்திருக்க வேண்டும் எனறும் உ.பி.யின் தியோபாண்ட் நகர இஸ்லாமிய அமைப்பு கூறியுள்ளது.,
’’முஸ்லிம்கள் தாடி வைத்திருக்க கூடாது என்பது தவறானது. அலி தாடியை எடுத்திருப்பது பாவமான செயல். தாடியை எடுக்குமாறு அலி நிர்ப்பந்தம் செய்யப்பட்டிருந்தால் அவர் சப்-இன்ஸ்பெக்டர் வேலையில் இருந்து விலகி இருக்க வேண்டுமே தவிர,தாடியை மழித்திருக்க கூடாது’’ என்று இந்த அமைப்பை சேர்ந்த இஸ்லாமிய உறுப்பினரக்ள் கருத்து தெரிவித்துள்ளனர்.
– பா.பாரதி