டில்லி
டிவிட்டரில் பாஜக தலைவர்கள் பெயருடன் காவல்காரர் என சேர்த்துக் கொள்வதை சுஷ்மா ஸ்வராஜின் கணவர் விமர்சித்துள்ளார்.
பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காவல்காரர் திருடன் ஆனார் என தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அதை ஒட்டி பிரதமர் மோடி #நானும்காவல்காரன்தான் என்னும் ஹேஷ் டாகை பரப்பினார். அது பலராலும் பரப்பப் பட்டு டிரெண்ட் ஆகியது.
அத்துடன் இந்த கோஷத்தை பாஜக தொண்டர்கள் உள்ளிட்டோர் பலரும் பரப்ப வேண்டும் என மோடி கேட்டுக் கொண்டார். அதை ஒட்டி நேற்று பாஜகவின் தொண்டர்கள் அனுதாபிகள், தலைவர்கள் ஆகியோர் தங்கள் டிவிட்டர் பெயருக்கு முன் காவல்காரர் (சௌக்கிதார்) என சேர்த்துக் கொண்டுள்ளனர்.
இவ்வாறு தனது பெயருடன் காவல்காரர் என்பதை சேர்த்துக் கொண்டவர்களில் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும் ஒருவர் ஆகும். இதை அவரது கணவர் ஸ்வராஜ் கவுஷல் விமர்சித்துள்ளார்.
சுஷ்மாவின் கணவர் ஸ்வராஜ் கவுஷல் தனது டிவிட்டர் பக்கத்தில் “நான் இன்று காலை கண் விழித்தேன் என் மனைவி காவல்காரி ஆகி உள்ளார்” என பதிந்துள்ளார்.