ந்தி நடிகர் சுஷாந்த் தற்கொலை வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ. அதிகாரிகள் மும்பை சாந்தாகுரூஸ் பகுதியில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சுஷாந்தை அவரது காதலியும், நடிகையுமான ரியா சக்ரவர்த்தி தான், தற்கொலைக்கு தூண்டினார் என சுஷாந்த் தந்தை புகார் அளித்துள்ள நிலையில், ரியாவை விசாரணைக்கு வருமாறு சி.பி.ஐ. அழைத்திருந்தது.

அதன்படி கடந்த நான்கு நாட்களாக தினமும் ரியா, சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கியுள்ள விருந்தினர் மாளிகைக்கு வந்திருந்து வாக்குமூலம் கொடுத்து வருகிறார்.

நேற்று நான்காவது நாளாக அவரிடம் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடந்துள்ளது.
நான்கு நாட்களில் ரியாவிடம் சி.பி.ஐ.அதிகாரிகள் 35 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
நேற்று விசாரணை முடிந்து மாலையில் ரியா தனது வீட்டுக்கு வந்தார்.

அங்கு செய்தியாளர்கள் பெருமளவில் குவிந்திருந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.
காரில் இருந்து அவர் இறங்கவில்லை. நேராக சாந்தாகுரூஸ் காவல்நிலையத்துக்கு சென்ற அவர், தன் வீட்டில் செய்தியாளர்கள் நிறைய பேர் திரண்டுள்ளனர் என்று புகார் அளித்தார்.

செய்தியாளர்கள் மீது அவர் புகார் கொடுப்பது இது இரண்டாவது முறையாகும்.

அவரது புகாரை ஏற்ற போலீசார், அவருடன் 6 காவலர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் துணையுடன் மீண்டும் வீட்டுக்கு வந்த ரியாவை, அவர்கள், வழி ஏற்படுத்தி கொடுத்து எந்த வித சிரமமும் இல்லாமல் குடியிருப்புக்குள் செல்ல உதவினர்.

-பா.பாரதி.