நேற்று (29.08.20) சனோஜ் மிஸ்ரா இயக்கத்தில் ‘ஷஷாங்க்’ என்ற படத்தின் போஸ்டர் இணையத்தில் வைரலானது. ஒரு இளம் நட்சத்திரத்தின் மர்ம மரணமும், பாலிவுட்டின் வாரிசு அரசியலும் என்ற தலைப்போடு சமூக வலைதளங்களில் விளம்பரத்தப்பட்டது.

ரோர் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் மாருத் சிங் தயாரிக்கும் இப்படத்தில் ஆர்யா பாபர், ராஜ்வீர் சிங் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர்.

இதைத்தொடர்ந்து இந்த படம் சுஷாந்த் தற்கொலையை பற்றியது என்று பலரும் சமூக வலைதளங்களில் தெரிவித்து வந்தனர்.

https://twitter.com/shwetasinghkirt/status/1299557999334178816

இந்த படத்தின் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சுஷாந்த்தின் சகோதரி ஸ்வேதா சிங் ‘இந்த படத்தையும் அதை விளம்பரம் செய்பவர்களையும் புறக்கணிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார் .