அமேசான் ப்ரைம், நெட்ஃபிளிக்ஸ், ஹாட்ஸ்டார், ஜீ5, வூட் மற்றும் எம்எக்ஸ் ப்ளேயர் ஆகிய தளங்களில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 20 வரை வெளியான இந்தித் திரைப்படங்கள் பார்க் மற்றும் நீல்ஸன் நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் முதல் வாரத்தில், அதிக பார்வையாளர்களை ஈர்த்த திரைப்படம் என்கிற பட்டியலில் ‘தில் பெச்சாரா’ முதலிடத்தைப் பெற்றுள்ளது..
இரண்டாம் இடத்தில் ஆக்ஷன் திரைப்படமன ‘குதா ஹாஃபிஸ்’ இடம் பிடித்துள்ளது.
வெப் சீரிஸ் பட்டியலில் ‘மஸ்த்ராம்’ தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களை ‘பாந்திஷ் பாண்டிட்ஸ்’, ‘டேஞ்சரஸ்’ மற்றும் ‘ஆர்யா’ ஆகிய தொடர்கள் பிடித்துள்ளன.
மேலும், செங்கோட்டையில் நடந்த சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் உரை 460 கோடி நிமிடங்கள் பார்க்கப்பட்டுள்ளன.