பெங்களூருவில் நடந்த சாலை விபத்தில் பிரபல கன்னட மற்றும் துளு இயக்குநர் சூர்யோதயா பெரம்பல்லியின் 20 வயது மகன் மரணமடைந்திருக்கிறார்.
20 வயதாகும் மயூர் தனது நண்பர் வாங்கிய புது பைக்கில் 13 வயதாகும் தனது பக்கத்து வீட்டு சிறுமியை ஏற்றிக் கொண்டு சென்றிருக்கிறார்.
காயங்களுடன் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 300 சிசி பைக்கை வேகமாக ஓட்டிச் சென்றதே விபத்துக்குக் காரணம் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மயூரின் உயிர் பிரிந்திருக்கிறது.தேசிய நெடுங்சாலையில் செல்லும் போது அவருடைய பைக், டேங்கர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.