சென்னை

டிகர் சூர்யாவின் 49 ஆம் பிறந்த நாளையொட்டி அவரது படங்கள் ரி ரிலீசாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். விரைவில் இவர் நடிப்பில் திரைக்கு வரவுள்ள படம் ‘கங்குவா’. அதைத்த்தொடர்ந்து நடிகர் சூர்யா தனது 44-வது படத்தில் நடித்து வருகிறா.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நடந்து வருகிறது. அடுத்த மாதம் 23-ம் தேதி  சூர்யா தனது 49-வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார்.

சூர்யாவின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக அவர் நடித்து மிகவும் பிரபலமான சில படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது காக்க காக்க, கஜினி, வாரணம் ஆயிரம், அயன் மற்றும் சிங்கம் ஆகிய படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே சூர்யாவின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.