
மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர் சுரேஷ் கோபி. இவர் தமிழில், அஜித் நடித்த தினா, சமஸ்தானம், ஷங்கர் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த ஐ போன்ற படங்களில் நடித்துள்ளார்.
நடிகரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சுரேஷ் கோபி, நிமோனியா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 4 நாட்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது சுரேஷ் கோபிக்கு ஏற்பட்டிருக்கும் நிமோனியா பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருவதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. நடைபெற உள்ள கேரள சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் திருச்சூர் அல்லது திருவனந்தபுரம் தொகுதிகளில் சுரேஷ் கோபி வேட்பாளராக நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது.
[youtube-feed feed=1]