திருச்செந்தூர்: கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று மாலை திருச்செந்தூர் கடற்கரையில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற உள்ளதால், நாடு முழுவதும் இருந்து திருச்செந்தூரில் பக்தர்கள் அலைஅலையாய் குவிந்து வருகின்றனர்.

கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் திருச்செந்தூரில் இன்று மாலை நடைபெறுகிறது. கடற்கரையில் மாலை 4.30 மணியளவில் நடைபெறும் சூரசம்ஹாரத்தை காண  நேற்று முதலே பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பல ஆயிரம் பக்தர்கள் செந்தூர் கடற்கரையில் குவிந்து உள்ளனர். இதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர் சோலை ஆகியவை முருகனின் அறுபடை வீடுகளாக திகழ்கிறது.  உலகம் முழுவதும் எத்தனை முருகன் கோவில்கள் இருந்தாலும் குறிப்பிட்ட அறுபடை கோவில்கள் எனப்படும் இந்த  ஆறு கோவில்கள் மட்டுமே வெகுசிறப்பு வாய்ந்தது இதில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர்  மட்டுமே கடற்கரை கோவிலாக உள்ளது. .  அதிலும் சூரனை வதம் செய்த செந்தூர் புகழ்பெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று நடைபெறும் கந்த சஷ்டி விழாவில் தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். நடப்பாண்டு  திருச்செந்தூர் முருகன் கோயிலில்  நவம்பர் 2ந்தேதி அன்று  காலை 7 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. இதையொட்டி,  அன்றைய தினம்  அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்குஉதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறுகிறது. காலை 7 மணியளவில் யாகசாலை பூஜையுடன் விழா தொடங்கி சிறைப்பாக நடைபெற்ற வருகிறது.

பின்னர் 5-ம்நாள் வரை அதிகாலை 3 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

தினமும் பகல் 12.45 மணிக்கு யாகசாலையில் இருந்து ஜெயந்திநாதர் எழுந்தருளி, வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலியபாடல்களுடன், மேளவாத்தியங்களுடன் சண்முகவிலாசம் சேர்தலும், தீபாராதனையும் நடைபெற்று வருகிறது. பின்னர்,  மாலை 4 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெறும்.

கந்த சஷ்டி விழாவின் சிறப்பு அம்சமான சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் கடற்கரையில்   இன்று ( நவம்பர் 7ந்தேதி மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் செந்தூரை நோக்கி அலைஅலையாய் படையெடுத்து வந்துகொண்டிருக்கின்றனர்.

எம்பெருமான் ஜெயந்திநாதர் (முருகன்)  இன்று மாலை சூரசம்ஹாரத்துக்காக கடற்கரையில் எழுந்தருள்வார். அங்கு சூரனிடம் போரிட்டு அவரை  வதம் செய்ய உள்ளார்.

இந்த  விழாவை காண   லட்சக்கணக்கான பக்தர்கள் செந்தூரில் குவிந்து வருகின்றனர்.

சூரசம்ஹாரம் முடிந்த பின்னர் சந்தோஷ மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெறும். பின்னர் கிரிப்பிரகாரம் வந்து,திருக்கோயில் சேர்தல் நடைபெறும். இரவு 108 மகாதேவர் சந்நிதி முன்பு சுவாமிக்கு சாயா அபிஷேகம் முடிவுற்ற பின்னர், பக்தர்களுக்கு சஷ்டி பூஜை தகடுகள் கட்டுதல் நடைபெறும்.

இதைத்தொடர்ந்து நாளை  காலை 5.30 மணிக்கு தெய்வானை அம்மன் தபசுக்கு புறப்பாடு, மாலை 6.30 மணிக்கு அம்மனுக்கு சுவாமி காட்சிகொடுத்து, மாலை மாற்றுதல், இரவு திருக்கல்யாண உற்சவம் ஆகியவை நடைபெற உள்ளன.

விழாவையொட்டி, விரதமிருக்கும் பக்தர்கள் தங்குவதற்காக தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்டு உள்ளது., கடற்கரையில் மணலை சமன்செய்து, தடுப்புகள், தற்காலிக கழிப்பறைகள், வாகன நிறுத்துமிடம்அமைத்தல் உள்ளிட்ட பணிகள் செய்யப்பட்டு உள்ளன,