டில்லி,

ற்கனவே அரசு பணிகளுக்கு ஆதாரை கட்டாயமாக்கக்கூடாது என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்திருந்தது.

ஆனால், மத்திய அரசு அனைத்து விதமான பணிகளுக்கும், பரிவர்த்தனைகளுக்கும் ஆதார் கட்டாயம் என அறிவித்து, செயல்படுத்தியும் வந்தது.

இந்நிலையில் இதுகுறித்த வழக்கு இன்று உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது,  ஏற்கனவே அளித்துள்ள  உச்சநீதிமன்ற உத்தரவையும் மீறி  அரசு  திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைத்து வரும்,  மத்திய அரசுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

 

ஏற்கனவே இதுதொடர்பான வழக்கில்  அரசுத் திட்டங்களுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கக் கூடாது என ஏற்கனவே உத்தரவிட்ட நிலையில், அதை மீறியது ஏன் என்றும் கேள்வி எழுப்பியது.

மத்திய அரசின் இந்த செயல்,  உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் செயல் என்று கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண்ணை கட்டாயமாக்கியது ஏன் என கேள்வி எழுப்பினர்.

அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒருவரே பல பான் கார்டு வைத்திருப்ப தாகவும், அதன் மூலம் வருமான வரிக்கணக்குத் தாக்கல் உள்ளிட்ட பல்வேறு வகையில் முறை கேட்டில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார்.

ஆனால், மத்திய அரசின் இந்த கோரிக்கையை ஏற்க நீதிபதிகள், அரசு திட்டங்களுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கக் கூடாது என உத்தரவிடுவது இதுவே கடைசி எனக்கூறி, வழக்கை ஒத்திவைத்தனர்.