
2ஜி வழக்கு தீர்ப்பு இன்று வெளியானது. குற்றம் சாட்டப்பட்டிருந்த கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட அனைவரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
இதையடுத்து தி.மு.க. தொண்டர்கள் வெடி வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆ.ராசாவின் பெரம்பலூர் அலுவலகத்திலும் உற்சாகமாக தொண்டர்கள் கொண்டாடினார்கள்.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட பலர் கனிமொழி மற்றும் ராசாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், மகராஷ்டிரா தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் மகளும், எம்.பி.யுமான சுப்ரியா சூலே, கனிமொழிக்கு இனிப்பு ஊட்டி வாழ்த்து தெரிவித்தார்.
Patrikai.com official YouTube Channel