டில்லி

ந்திய உச்சநீதிமன்ற இணயதளம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது.

இணைய தள ஹேக்கர்கள் பல அரசு இணைய தளங்களை முடக்கி வருகின்றனர்.   இந்திய ராணுவ இணையதளம் முடக்கப்பட்டது.   மற்றும் பாகிஸ்தான் உச்சநீதிமன்ற இணையதளம் சமீபத்தில் முடக்கப்பட்டது.

தற்போது இந்திய உச்சநீதிமன்ற இணயதளம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இது குறித்து முகநூல் பதிவு ஒன்றில்.  “அடக் கடவுளே ? உச்சநீதிமன்ற இணையதளம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது.  மோடியின் அரசால் அரசாங்கத்தின் மற்றும் அமைச்சகத்தின் இணையதளங்களை பாதுகாக்க முடியவில்லை.   அவர்கள் எவ்வாறு  பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாப்பார்கள்? “  எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.