டெல்லி:
கொரோனா செய்திகனை வெளியிடுவதில் ஊடகங்கள் உண்மைத்தன்மை தெரியாமல் செய்தி வெளியிடக்கூடாது என்று உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து மத்திய, மாநில அரசுகள் வெளியிடும் தகவல்கள் ஒரு மாதிரியும், ஊடகங்களில் வெளியாகும் செய்தி மாறுபட்டும் காணப்படுகிறது. இதனால் பல இடங்களில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
இதுகுறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் காணொளி காட்சி மூலம் விசாரிக்கப்பட்டது. அப்போது, மத்தியஅரசு சார்பில் தாக்கல் செய்ய மனுவில், கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து, ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிடு வதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இடையூறு ஏற்படுகிறது என்று தெரிவித்தது. மேலும், கொரோனா நிலவரம் குறித்த மத்திய அரசு அளிக்கும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் ஊடகங்கள் செய்தி வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியது.
விசாரணையின்போது, கொரோனா வைரஸூக்கு எதிரான போராட்டத்தில், ஊடகங்களில் வெளியாகும் போலி செய்திகள் பெரும் தடையாகவும், தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்குவதாகவும் மத்திய அரசு வாதிட்டது
இதனையடுத்து உத்தரவிட்ட நீதிமன்றம், ஊடகங்களோ, பத்திரிகையோ அரசு வழங்கிய நெறிமுறைகளில் இருந்து விலகி, உண்மை அறியாமல் செய்தி வெளியிடவோ, அச்சிடவோ கூடாது என்று வலியுறுத்தி உள்ளது.