டில்லி :
நீதிபதி லோயா மரணம் தொடர்பான அனைத்து வழக்குகளும் சுப்ரீம் கோர்ட்டிற்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கையும் உச்சநீதிமன்றமே விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீதிபதி லோயா மரணம் தொடர்பாக தாக்கல் செய்யப்படும் எந்த பொதுநல வழக்குகளையும் உயர்நீதி மன்றங்கள் ஊக்குவிக்க வேண்டாம் எனவும், நீதிபதி லோயா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை பிப்ரவரி 2 ம் தேதி முதல் நடக்கும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சிபிஐ சிறப்பு நீதிபதி லோயா மரணம் தொடர்பாக சிறப்பு விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு நீதிபதி அருண் மிஸ்ராவிடம் ஒப்படைக்கப்பட்டது தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் அதிருப்தி தெரிவித்ததை அடுத்து, இவ்வழக்கில் விசாரணை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வுக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த புதிய உத்தரவை பிறப்பித்து இருக்கிறது.