டெல்லி: உச்சநீதிமன்ற வளாகத்தில் படுக்கை வசதிகள், பரிசோதனைகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கொரோனா 2ம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், ஆக்சிஜன் தட்டுப்பாடு போன்றவை நிலவி வருகிறது.
இந் நிலையில் 2ம் அலை பரவலை சமாளிக்க உச்சநீதிமன்ற வளாகத்தில் கொரோனா சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது. நீதிமன்ற வளாகத்தில் படுக்கை வசதிகள், கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ள தலைமை நீதிபதி என்.வி.ரமணா அனுமதி அளித்து உள்ளார்.
மே 7ம் தேதியிலிருந்து உச்ச நீதிமன்றத்துக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறை காலத்தில் நீதிமன்ற வளாகத்தில் கொரோனா சிகிச்சை பணிகளை மேற்கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.