டெல்லி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதற்கு உச்சநீதி மன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் ஒன்றரை மாதங்களை கடந்தும் தொடர்கிறது. இது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம்,இன்றைய காரசார விவாதங்களை தொடர்ந்து, வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதிப்பதாக தீர்ப்பு அளித்துஉள்ளது.

மேலும், விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வுகாணவும், வேளாண் சட்டங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும் வேளாண் சட்டங்கள் தொடர்பாக உள்ள நிறை, குறைகளை குழுவிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் விவசாயிகள் போராட்டத்தை தொடரவும் அனுமதி வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

3 வேளாண் சட்டங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தையை முன்னெடுக்க உச்சநீதி மன்றம் சார்பில் அமைக்கப்பட்ட குழுவில , பூபிந்தர் சிங் மான், பிரமோத் குமார் ஜோசி, அலோக் குலாட்டி, அனில் தன்பாத் ஆகிய வேளாண் துறையை சார்ந்த நிபுணர்கள் குழுவில் இடம்பிடித்துள்ளனர்.

வேளாள் சட்டங்களில் சில திருத்தங்கள் செய்தால் போனது என்று கடந்த மாதம் அமைச்சர் தோமருக்கு கடிதம் எழுதியவர்களில் பூபிந்தர் சிங் மான், தற்போது உச்சநீதி மன்றம் அமைந்துள்ள நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.