டெல்லி: 2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரை விடுவித்த மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. அதே வேளையில், இந்த தடை உத்தரவு  குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறையில் இருந்து விடுதலையாவதை பாதிக்காது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

கடந்த 2006ஆம் ஆண்டு 8 நிமிட இடைவெளியில் 7மின்சார ரயில்களில் பயங்கரவாதிகள் குண்டு வெடிப்பை அரங்கேற்றினர். நாடு முழுவதும் அதிர்வலை களை ஏற்படுத்திய இந்த குண்டுவெடிப்புத் தாக்குதலில் 180 பேர் பலியாகினர். 829 பேர் படுகாயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த மும்பை விசாரணை நீதிமன்றம்   12 பேர் குற்றவாளிகள் என்றும், ஒருவரை விடுதலை செய்தும் 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது.

இதை எதித்தது, தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம், குற்றவாளிகளில் ஐந்து பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையையும், மீதமுள்ள ஏழு பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையையும் உறுதி செய்ய மறுத்துவிட்ட மும்பை உயர் நீதிமன்றம், அவர்களை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மகாராஷ்டிரா மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.

180 பேர் பலியான மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 12 பேரும் விடுதலை! மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு…