டில்லி

லுகை மதிப்பெண்கள் குறித்து வேலூர் மாணவர் தொடர்ந்த வழக்கையொட்டி, மாணவர் சேர்க்கை மற்றும் கலந்தாய்வுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை பிறப்பித்துள்ளது.

நடந்து முடிந்த ஐஐடி நுழைவுத் தேர்வில் இந்தி மொழியில் கொடுக்கப்பட்ட வினாத்தாளில் பிழை இருந்தது.  இதையொட்டி, இந்தி மொழியில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு சலுகை மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.

ஆனால் ஆங்கிலத்தில் வழங்கப்பட்ட வினாத்தாளில் எந்தப் பிழையும் இல்லை.   இருந்த போதிலும் ஆங்கில மொழியில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கும் சலுகை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.  இதை எதிர்த்து வேலூரை சேர்ந்த மாணவர் ஒருவர் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்றம் இன்று, அனைத்து ஐ ஐ டி க்களிலும், மாணவர் சேர்க்கைக்கும் அது குறித்த கலந்தாய்வுக்கும் இடைக்கால தடை விதித்துள்ளது.  அது மட்டுமின்றி ஐஐடி மாணவர் சேர்க்கை குறித்து வேறு எந்த நீதிமன்றமும் விசாரிக்கவும் தடை விதித்துள்ளது.

வழக்கின் விசாரணை வரும் 10ஆம் தேதியன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது