புதுடெல்லி:
ச்ச நீதிமன்றத்தில் மார்ச் முதல் வாரத்தில் வழக்கமான வழக்கு விசாரணை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று இந்திய பார் கவுன்சில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய பார் கவுன்சில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உச்சநீதிமன்றத்தில் வழக்கமான விசாரணையை மீண்டும் தொடங்குவது குறித்து விவாதிக்க பார் தலைவர்கள் மற்றும் இந்திய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே ஆகியோர் இடையேயான கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தின் போது, ​​சி.ஜே.ஐ போப்டே உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழக்கமான வழக்கு விசாரணைகளை மீண்டும் துவக்க தயாராக இருப்பதாக தெரிவித்தனர். 2021 மார்ச் முதல் வாரத்தில் இருந்து நீதிமன்றங்கள் அதன் செயல்பாட்டை மீண்டும் தொடங்குவதற்கு தொழில்நுட்ப சிக்கல்களை விரைவாக தீர்க்குமாறு பொதுச்செயலாளர்,  நீதிபதி போப்டேவிடம் கேட்டு கொண்டார். இதையடுத்து பேசிய சி.ஜே.ஐ போப்டே, தற்போது நடைபெற்று வரும் வீடியோ கான்பிரன்ஸ் விசாரணைகள் தொடர்ச்சியாக இருப்பதால் பல்வேறு வழக்கறிஞர்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்று தெரிவித்தார். இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மார்ச் முதல் வாரத்தில் வழக்கமான வழக்கு விசாரணை  துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.