போபால்:

த்தியபிரதேச மாநிலத்தில் எழுந்துள்ள அரசியல் நெருக்கடி காரணமாக, கமல்நாத் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரி, முன்னாள் பாஜக  முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், இது தொடர்பாக, சட்டமன்ற சபாநாயகர் மற்றும் முதல்வர் கமல்நாத் ஆகியோர் 24 மணி நேரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், அதைத் தொடர்ந்தே, நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து உத்தரவிடப்படுமா? என்பது குறித்து அறிவிக்கப்பட்டு என்று  கூறி உள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு  எதிராக, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா ஆதரவு 6 அமைச்சர்கள் உள்பட  22 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். இவர்களில் அமைச்சர்களின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ள நிலையில்,  16எம்எல்ஏக்களின் ராஜினாமாவை சபாநாயகர் இதுவரை ஏற்கவில்லை.

கவர்னர் சட்டசபையை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கமல்நாத் அரசுக்கு உத்தரவிட்டார். ஆனால், அதை நிறைவேற்றப்படவில்லை.  நேற்று மாநில சட்டமன்றம் கூடியதும், கவர்னர் லால்ஜி தாண்டன் சுமார் 1 நிமிடம் மட்டுமே உரையாற்றிவிட்டு வெளியேறினார்.

அதைத்தொடர்ந்து,  அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என பாஜக எம்எல்ஏக்கள் வலியுறுத்தி முழக்கமிட்டனர். ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சபையை சபையை ஒத்தி வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, மார்ச் 26-ம் தேதி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய பிரதேச முன்னாள் பாஜக சிவராஜ் சிங் சவுகான், உச்ச நீதிமன்றத்தை நாடினார். மத்திய பிரதேச மாநிலத்தில் நிலவும் அரசியல் நெருக்கடியை கருத்தில் கொண்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்படி கமல்நாத் அரசுக்கு உத்தரவிடவேண்டும் என அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.

இந்த நிலையில், வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய பிரதேச சட்டமன்ற சபாநாயகர் மற்றும் முதல்வர் கமல்நாத் ஆகியோருக்கு 24 மணி நேரத்திற்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  விளக்கத்தைத் பொறுத்தே, அங்கு உடனே  நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டுமா என்பது குறித்து நாளை காலை 10:30 மணிக்கு அறிவிக்கப்படும் என்று கூறி உள்ளது.