டெல்லி:  கோவில் நிலத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்கும் தமிழக அரசின் அரசாணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோவிலுக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டு வருகிறது. , வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 35 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தி உள்ளது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், நிலத்தை கையப்படுத்தும் தமிழகஅரசின்  அரசாணை செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. ஆட்சியர் அலுவலகம் அமைக்க கோயில் நிலத்தை குத்தகை முறையில் கையகப்படுத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கோவில் நிர்வாகம் தரப்பில்  மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், நிலம் கையகப்படுத்தும் தமிழக அரசின் அரசாணைக்கு  இடைக்காலத் தடை விதித்துள்ளது.

கோவில் நிலத்தில் ஆட்சியர் அலுவலகம்! தமிழகஅரசு மீது அதிருப்தி தெரிவித்த உயர்நீதி மன்றம்