டில்லி

ற்போது உச்சநீதிமன்றத்தில் பேரழிவுக்கு ஒப்பான சூழல் நிலவி வருவதாக முன்னாள் தலைமை நீதிபதி லோதா கூறி உள்ளார்.

மத்திய முன்னாள் அமைச்சர் அருண் ஷோரி எழுதிய ”அனிதா கெட்ஸ் பெயில் – வாட் அவர் கோர்ட்ஸ் ஆர் டூயிங்? வாட் ஷுட் வி டு அபவுட் தெம்?” (அனிதாவுக்கு ஜாமீன் கிடைத்தது,  நீதிமன்றங்கள் என்ன செய்கின்றன.  நாம் அவைகளை என்ன செய்ய வேண்டும்?)  என்னும் புத்தக வெளியீட்டு விழா டில்லியில் நடைபெற்றது.  இந்த விழாவில் அத்வானி, யஷ்வந்த் சின்ஹா, ப சிதம்பரம்,  சாந்தி பூஷன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

இந்த விழாவில் முன்னாள் தலைமை நீதிபதி லோதா உரையாற்றும் போது, “நீதித்துறை சுதந்திரமாக இயங்க வேண்டும். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.   ஆனால் உச்சநீதிமன்றத்தை நடத்திச் செல்லும் தலைமை நீதிபதியின் அணுகுமுறை ஆரோக்யமாக இருக்க வேண்டும்.   அவர்தான் பொறுப்புடன் சக நீதிபதிகளை அர்வணைத்து நீதித்துறையை முன்னெடுத்து செல்லவேண்டும்.

நீதித்துறையை பல மாற்றுக் கருத்துக்களுக்கும் வேறுபாடுகளுக்கும் இடையில் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டியது நீஇதிபதிகளின் கடமை ஆகும்.  தற்போது உச்ச நீதிமன்றத்தில் பேரழிவுக்கு ஒப்பான சூழல் நிலவி வருகிறது.  இந்த சூழலை உடனடியாக மாற்றி அமைத்தாக வேண்டும்.” என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய முன்னாள் டில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி  ஏ பி ஷா, “உச்சநீதிமன்றம் அண்மையில் நீதிபதி லோயா மரணம் குறித்து அளித்த தீர்ப்பு முழுவதும்  தவறான ஒன்றாகும்.   அத்துடன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது சக நீதிபதிகளே புகார் கூறியது மிகவும் தீவிரமான ஒன்றாகும்” என கூறினார்.   அடுத்து பேசிய அருன்ஷோரியும் இதே கருத்துக்களை தெரிவித்துள்ளார்.