டெல்லி: ராமர் பாலத்தை நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ராமர் சேது பாலம் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள பாம்பன் தீவு அல்லது ராமேஸ்வரம் தீவு மற்றும் இலங்கையில் உள்ள மன்னார் தீவு ஆகியவற்றுக்கு இடையே உள்ள இயற்கை கனிம வளங்கள் நிறைந்த பகுதி ஆகும்.  இது புராண மற்றும் வரலாற்று கோட்பாடுகளை ஒன்றாக இணைக்கும் வகையில் காணப்படுகிறது.  ராமர் சேது என்றும் அழைக்கப்படும் ஆதாம் பாலம் அத்தகைய கட்டுமானங்களில் ஒன்றாகும். இந்த பாலம் இந்து புராணங்களின்படி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும் ,ராமாயணத்தில், ராமர் இலங்கை செல்வதற்காக வானரப் படையினரால் உருவாக்கப்பட்டது, இந்த ராமர் சேது பாலம் என்ற நம்பிக்கையும் உள்ளது. ராமர் சேது பாலத்தின் வயதைக் கண்டறியும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், இந்த அமைப்பு விஞ்ஞானிகளையும் கவர்ந்துள்ளது. மேலும், ராமர் சேதுவை தேசிய நினைவுச்சின்னமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.

ஏற்கனவே பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி,எ ராமர் பாலத்தை தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்க கோரிய மனு உச்ச நீதிமன்றத்தில்  நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில்,  ராமர் சேது பாலத்தை தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கவும்,  ராமர் சேது தலத்தை அனைவரும் தரிசிக்கும் வகையில்,  ‘கடலில்’ சில மீட்டர்கள்/கிலோமீட்டர்கள் தூரத்திற்கு அசுவர் கட்டக் கோரக்கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கு  லக்னோவைச் சேர்ந்த வழக்கறிஞர் அசோக் பாண்டே மூலம் இந்து தனிநபர் சட்ட வாரியத்தால் இந்திய அரசியலமைப்பின் 32 வது பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட ஒரு ரிட் மனுவாக தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு நேற்று (அக்டோபர் 4ந்தேதி) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  இந்த வழக்கை சுப்ரமணியன் சுவாமியின் மனுவுடன் சேர்த்து விசாரிக்க அந்த அமைப்பின் தலைவரும், வழக்கறிஞருமான அசோக் பாண்டே நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்க மறுத்த நீதிமன்றம், ‘மனுதாரர் விடுத்துள்ள கோரிக்கைகள் மீது, நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. இது, அரசின் நிர்வாகம் தொடர்பானது; நீதிமன்றம் தலையிட முடியாது’ என உத்தரவிட்டு, மனுவை தள்ளுபடி செய்தது.