டெல்லி: உயர்நீதிமன்றங்களுக்கு 23 நீதிபதிகளை நியமிக்கும் பரிந்துரைக்கு உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல் வழங்கி உள்ளது. அதன்படி, சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வழக்கறிஞர் ஜெ.சத்தியநாராயண பிரசாத் நீதிபதியாக நியமிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்களுக்கு 23 நீதிபதிகள் நியமிப்பது தொடர்பாக நியமிப்பது ஆய்வு செய்யப்பட்டு பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்துக்கு, 4 வழக்கறிஞர்களும், ஒரு நீதிசார் அலுவலரும் நீதிபதிகளாக பரிந்துரைக்கப்பட டிருந்தனர். அதற்கு உச்சநீதி மன்ற தலைமைநீதிபதி தலைமையிலான கொலிஜீயம் ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வழக்கறிஞர் ஜெ.சத்தியநாராயண பிரசாத் நீதிபதியாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டிருந்தது. மேலும், அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு ஒரு வழக்கறிஞர், உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், கர்நாடகா உயர் நீதிமன்றத்துக்கு 4 வழக்கறிஞர்கள் நீதிபதிகளாக நியமிக்கும் பரிந்துரை மற்றும், கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு இரு வழக்கறிஞர்கள் நீதிபதிகளாக நியமிக்கும் பரிந்துரை கொலிஜீயம் ஒப்புதல் அளித்துள்ளது.
அதுபோல பஞ்சாப்-அரியானா உயர்நீதிமன்றத்தில் பணியாற்றிவரும் 10 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கும் பரிந்துரைக்கும் கொலிஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.