டெல்லி: முதுநிலை மருத்துவ படிப்புங்கான நீட் நுழைவு தேர்வை ஒரே ஷிப்டில் தேர்வை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், முதுநிலை தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்ததீர்வு ஆகஸ்டு 3ந்தேதி நடத்த உச்சநீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

முதுநிலை நீட் தேர்வை ஆகஸ்ட் 3ம் தேதி நடத்த அனுமதி கோரிய தேசிய மருத்துவ தேர்வுகள் வாரியத்தின் மீதான மனு, உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இதையடுத்து, முதுநிலை நீட் தேர்வை ஆகஸ்ட் 3ம் தேதி நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வான நீட் முதுநிலை தேர்வு ஜுன் 15 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இதற்கிடையில், தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும் என மாணவர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு, இந்த விஷயத்தில், மருத்துவ வாரியம் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது. மேலும், ஒரே ஷிப்ட்டில் தேர்வு நடத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.
விசாரணையின்போது ஒரே ஷிப்டில் தேர்வை நடத்த வேண்டுமென்றால், கால அவகாசம் தேவை என என்டிஏ கோரியது. இதை ஏற்று, அவகாசம் எடுத்துக்கொண்டு, ஒரே ஷிப்டில் தேர்வினை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, வரும் 15ஆம் தேதி 2 கட்டங்களாக நடைபெற இருந்த நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது.
இதையடுத்து வழக்கின் இன்றைய விசாரணையின்போது, தேசிய மருத்துவ ஆணையம் கொடுத்த அறிக்கையை தொடர்ந்து, ஆகஸ்ட் 3ம் தேதி நீட் முதுநிலை தேர்வு நடத்தலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது.
முதுநிலை நீட் தேர்வு ஒரே ஷிப்டில் நடத்தப்பட வேண்டும்! உச்சநீதிமன்றம் உத்தரவு