புதுடெல்லி:
மக்கள்பிரதிநிதிகள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று அமைச்சர் அமித்ஷாவுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்தின் போது இஸ்லாமியர்கள் இட ஓதுக்கீடு தொடர்பாக மத்திய அமைச்சர் அமித்ஷா பேசி வந்த நிலையில், அவரது பேச்சுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் இஸ்லாமியர்கள் இட ஓதுக்கீடு ரத்து தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் போது, அதைப்பற்றி ஒரு மக்கள் பிரதிநிதி பொதுவெளியில் எப்படி பேசலாம்? மக்கள்பிரதிநிதிகள் பேசும் போது கவனமுடன் இருக்க வேண்டும் என்றும், இட ஓதுக்கீட்டை அரசியலாக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.