டெல்லி: பெரும் பரபரப்பை ஏற்படுத்திய  சம்பவமான  7வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட  குற்றவாளி தஷ்வந்த்-ஐ உச்சநீதிமன்றம்  விடுதலை செய்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீப காலமாக உச்சநீதிமன்றத்தின் பல தீர்ப்புகள் கேள்விக்குறியாகி வருகிறது. விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றன.  பல மரண தண்டனை கைதிகள் விடுவிக்கப்படுவதும், ஊழல் தொடர்பான மேல்முறையீடு வழக்கில் உடனே தடை கொடுக்கப்படுவதும்,  பல முக்கிய வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்படுவதும், சில வழக்குகளை விரைந்து விசாரிக்க முற்படுவதும் விவாதப்பொருளாக மாறி வருகிறது. இதனால் குற்றவாளிகள், ஊழல்வாதிகள் சட்டத்தை மதிக்காத நிலை தொடர்கிறது.

இந்த நிலையில், தமிழக மக்களிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியே 7வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தீ வைத்து எரித்து கொலை செய்த வழக்கின் குற்றவாளியான துஷ்யந்தை உச்சநீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை அருகே உள்ள  போரூரை அடுத்துள்ள முகலிவாக்கத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 2017ம் ஆண்டு  பிப்ரவரி மாதம் ஏழு வயது சிறுமியைக் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் தஷ்வந்துக்கு அங்குள்ள மகிளா நீதிமன்றம்  மரண தண்டனை விதித்தது. முன்னதாக,  சிறுமி மாயனமானது தொடர்பான வழக்கை விசாரித்த காவல்துறை, அந்த சிறுமியின் உடன் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

இதுதொடர்பான விசாரணையின்போது, சிறுமி ஏமாற்றி அழைத்துச்சென்றதே அருகே வசிக்கும் துஷ்யந்த் என்ற இளைஞர் என்பது தெரிய வந்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததும், அதனால் மயக்க மடைந்த சிறுமியை தீ வைத்து எரித்துக்கொன்றதும் தெரிய வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது.

இந்த வழக்கின் விசாரணையின்போது ஜாமினில் வெளியே வந்த துஷ்யந்த், தனது தாயையும் ஈவுஇரக்கமின்றி கொலை செய்தார். ஆனால், இந்த வழக்கில், அவரது தந்தை மகனுக்கு ஆதரவாக பேசியதால், அவருக்கு விடுதலை கிடைத்தது. ஆனால், சிறுமி கொலை வழக்கில் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது.

இதை எதிர்த்து துஷ்யந்த் தரப்பில்  உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட  மனுவை விசாரித்து வந்த நீதிபதிகள், தஷ்வந்த் மீதான தண்டனையை ரத்து, அவரை  விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளனர்.

போதிய ஆதாரங்கள் இல்லாததால் எழுந்துள்ள சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்ட தஷ்வந்துக்கு சாதகமாக்கி அவர் விடுதலை செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.