தர்மசாலா:
அரசியல் களத்தில் குதித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினி திடீரென இமயமலைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இது வழக்கமான பயணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இமாச்சல் மாநிலம் கங்ரா விமான நிலையத்தை நேற்று பிற்பகலில் ரஜினி சென்றடைந்தார். பின்னர் பைஜ்நாத் நகரம் அருகே பாலாம்பூர் என்ற சிறிய கிராமத்திற்கு ரஜினி சென்றார்.
இதன் அருகே உள்ள கண்ட்பாடி கிராம தியான மையத்திற்கு அவர் சென்றார். அவருடன் முன்னாள் முதல்வர் பிரேம் குமார் துமலும் தியான மையத்தில் இருந்தார். ரஜினி 10 நாட்கள் அவர் இங்கே தங்கியிருந்து தியானம் உள்ளிட்ட பல்வேறு ஆன்மீக செயல்பாடுகளில் ஈடுபடுவார் என்று மைய தகவல்கள் தெரிவித்தன. இது குறித்து துமால் கருத்து கூற மறுத்துவிட்டார்.
[youtube-feed feed=1]